புத்தளத்தை சேர்ந்த ரொஸ்மின் மஹ்ரூப் ( அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவர் ) வபாத்தானார்.



புத்தளம் Town பிரதேசத்தை சேர்ந்தவரும், அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவருமான ரொஸ்மின் மஹ்ரூப்  வபாத்தானார்.

( அமெரிக்காவில் வசித்து வந்தவர், விடுமுறைக்காக புத்தளம் வந்திருந்த நிலையில் வபாத்தாகி உள்ளார் )


இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்.

புத்தளம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் வானியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் அமெரிக்கா NASA வில்  கடமை புரிந்தும் வந்தவர்.

திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த ரொஸ்மின் மஹ்ரூப் ( அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவர் ) வபாத்தானார். புத்தளத்தை சேர்ந்த ரொஸ்மின் மஹ்ரூப் ( அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவர் ) வபாத்தானார். Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5

நாம் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மைக் கட்சி என்பதால், இந்த தேர்தலில் காத்திரமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்குள்ளது ; ரவூப் ஹக்கீம்



(ஆர்.ராம்)

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆழமாகச் சிந்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் , கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட காலமாக அமைதி காத்துவந்திருந்த அவர் மு.கா.வின் நிலைப்பாடுகள் மற்றும் நகர்வுகள் குறித்து மௌனம் கலைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும், ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மைக் கட்சி என்ற வகையில் இந்த தேர்தலில் காத்திரமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்குள்ளது.

அந்த வகையில், நாங்கள் சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கள ஆய்வுகளை ஆழமாக அவதானித்து வருகின்றோம். இவ்விதமான தொடர்ச்சியான அவதானங்களின் அடிப்படையில் எமது இறுதியான நிலைப்பாட்டினை எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதங்களில் வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அதேநேரம், நாம் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் பங்காளியாக உள்ளோம். அவ்வாறு இருக்கின்றபோதும், தென்னிலங்கை தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டியொன்று ஏற்படும் பட்சத்தில் வரப்போகின்ற விளைவுகள் பற்றி நாம் தீவிரமாகக் கவனம் செலுத்தியுள்ளோம்.

குறிப்பாக, வேட்பாளரின் வெற்றிவாய்ப்புக்கள் குறித்து நாம் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் தொடர்ச்சியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அது தொடர்பில் மூடிய அறைப் பேச்சுக்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அப்பேச்சுவார்த்தைகள் தற்போது வரையில் இறுதியான கட்டத்தினை அடையவில்லை. ஆகவே அவற்றின் இறுதியான முடிவுகளும் எமது தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவுள்ளன.

அதேநேரம், எம்மைப் பொறுத்தவரையில் தனிநபரின் வெற்றியை மையப்படுத்தியோ அல்லது அடுத்த ஆறுவருடங்களுக்குத் தனிநபர் ஒருவரிடத்தில் அதிகாரத்தைக் கையளிக்கும் வகையில் தீர்மானங்களை எடுக்க முடியாது.

அதற்கு அடுத்தபடியாக நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கும் நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது வரையிலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுகின்ற நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியோ அல்லது அக்கட்சி சார்ந்த கூட்டணியோ தான் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைத்து வந்திருந்தமை வரலாறாக உள்ளது.

ஆகவே, அதற்கு மாறாக அரசியலில் நிகழ்வுகள் இடம்பெறும் என்று அதீதமான நம்பிக்கையைக் கொள்ளவும் முடியாது. அதேநேரம், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி வேட்பாளரும்ரூபவ் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற ஆட்சியும் அமையவேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகின்றது.

ஏற்கனவே சிறுபான்மை தேசிய இனங்களின் பல்வேறு விடயங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விசேடமாகக் கூறுவதாக இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகம் மீது பாரபட்சம் காண்பிக்கப்பட்டது. பழிவாங்கல்களுக்குள் உள்ளாக்கப்பட்டது.

ஆனால் தற்போது குறித்த மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் பிறிதொரு சதிவலையும், சக்தியும் உள்ளதாக அம்பலமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுபற்றிய விசாரணைகள் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை.

குறித்த விடயம் சம்பந்தமாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டு, விசேட ஆணைக்குழுவின் மூலமாகச் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சந்தேகப் பார்வை களையப்பட வேண்டும்.

அதேபோன்று, நாட்டின் பொருளாதார விடயமும் மிகவும் முக்கியமானது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகளைப் பின்னர் மீளத் திருத்தம் செய்ய முடியாது. ஆகவே அந்த உடன்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தினை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தற்போது அரசியல் இலாபத்துக்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பயன்படுத்தியதன் பின்னர் மீண்டும் பொதுமக்களை நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட முடியாது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகையிற்கு அப்பால் நாட்டின் நிலைமைகளை மாற்றவல்ல நிதியுதவிகளையும், உள்நாட்டு மேம்பாட்டையும் காண்பதற்கான வழிகள் கண்டறியப்பட வேண்டும்.

இவ்விதமான விடயங்களையெல்லாம் வெளிப்படைத்தன்மையுடன் கையாளக்கூடிய தலைமையும் நாட்டுக்கு அவசியமாகின்றது. ஆகவே, சரியான நேரத்தில் பொருத்தமான முடிவுகள் அவசியமாகின்றது. அவற்றை நாம் முறையாக வெளிப்படுத்துவோம் என்றார்


நாம் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மைக் கட்சி என்பதால், இந்த தேர்தலில் காத்திரமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்குள்ளது ; ரவூப் ஹக்கீம் நாம் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மைக் கட்சி என்பதால், இந்த தேர்தலில் காத்திரமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்குள்ளது ; ரவூப் ஹக்கீம் Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5

இராஜாங்க அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து.



இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த கார் பண்டாரவளை ஹல்பே பகுதியில் வைத்து இவ்வாறு திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் இராஜாங்க அமைச்சருக்கோ, ஓட்டுனருக்கோ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இராஜாங்க அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து. இராஜாங்க அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து. Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5

இலங்கை - இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.



இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாள்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயணத் திகதியை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்
இலங்கை - இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இலங்கை - இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5

அவுஸ்திரேலிய சிட்னி வணிக வளாக கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழந்த ஃபராஸ் தாஹிர்.



அவுஸ்திரேலியாவின் சிட்னி வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், இலங்கை ஊடாக அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொண்டி சந்தி வெஸ்ட்ஃபீல்டில், பாதுகாவலராகப் பணியாற்றிய 30 வயதான ஃபராஸ் தாஹிர் கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரேயொரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஃபராஸ் தாஹிர், பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
பாகிஸ்தானிய அரசியலமைப்பின் கீழ், அஹ்மதியா சமூகம் முஸ்லிம் அல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டு, வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், மத நம்பிக்கைகள் காரணமாக அவர்கள் தேர்தல்களிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையிலேயே ஃபராஸ் தாஹிர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இலங்கையின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்
அவுஸ்திரேலிய சிட்னி வணிக வளாக கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழந்த ஃபராஸ் தாஹிர். அவுஸ்திரேலிய சிட்னி வணிக வளாக கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழந்த ஃபராஸ் தாஹிர். Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு.



கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பதிவானது

இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளான் .

வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே சிறுவனின் உடலில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு. வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்  ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள்.



பூனைகள் பலரது வீட்டுப் பிராணியாகவும் செல்லப்பிராணியாகவும் காணப்படுகிறது.

பூனை வளர்த்தல் மனதுக்கு மகிழ்ச்சியையும், உளரீதியான ஆதரவு, மனநிலையை மேம்படுத்தல், மன உளைச்சலுக்கு ஆளானோர்க்கு உறுதுணை போன்றவற்றை வழங்குவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பூனைகளுடன் தொடர்புபடுதல் பல நோய்களும் பரவ வழிவகுக்கும்.

🛑 பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள். By: Dr Ziyad A.I.A

⁉️ பின்வரும் வழிகளில் பூனைகளினால் நோய்கள் பரவலாம்.

✅ 01. பூனை நகங்களால் விராண்டுதல் / கீறுதல்

✅ 02. கடித்தல் / உமிழ் நீர்

✅ 03. மலம்

✅ 04. தோல் / முடி

⁉️ பூனைகளால் பொதுவாக மனிதனுக்கு ஏற்படக்கூடிய / பரவக்கூடிய நோய்கள்:

🛑 01. Cat Scratch Disease:
இது Bartonella Hensale எனும் பக்றீரியாவினால் ஏற்படுகிறது.
நோயின் பெயரில் குறிப்பிட்டது போல் இது பூனை நகத்தினால் விராண்டுதல் அல்லது கடித்தல் அல்லது மனிதனின் காயம் உள்ள தோல் பகுதியில் பூனை நக்குதல் போன்றவற்றால் பரவுகிறது.

நோய்த்தொற்று பரவியவர்களில் வீக்கம், காய்ச்சல் போன்ற நோயறிகுறிகள் தோன்றும். இதற்கு Antibiotics மருந்துகள் தேவைப்படலாம்.

பொதுவாக 40%ஆன பூனைகள் தன் வாழ்வில் ஒருமுறையாவது இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும் என ஆய்வு தெரிவிக்கிறது. 

🛑 02. Rabies:
Rabies என்பது நரம்பு மண்டலத்தை தாக்கி உயிராபத்தை உண்டாக்கும் நோயாகும். இது பொதுவாக நாய்களால் பரவுவதால் "விசர் நாய்க்கடி" நோய் என அழைக்கப்படுகிறது.

இருந்தாலும் இது பூனை கடியினாலும் பரவும். இலங்கையில் 10%மான Rabies பூனை கடியினால் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேற்கத்திய நாடுகளில் நாய்களைப் போலவே பூனைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

இலங்கையை பொறுத்த வரையில் பூனைகள் தானாக வளரும் வீட்டுப் பிராணியாக இருப்பதால் அதற்கு தடுப்பூசி பற்றி பலரும் கவனம் எடுப்பதில்லை. இதனால் பூனைக் கடிக்கு உள்ளானால் கட்டாயமாக வைத்தியசாலைக்குச் சென்று Rabies தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

🛑 03. Compylobacteriosis எனும் வயிற்றுளைவு நோய்:

பூனைகள் Compylobacter எனும் பக்றீரியா தொற்றுக்கு உள்ளாகும்போது அவற்றின் மலத்தின் ஊடாக கிருமிகள் வெளி வரும். இவை பூனைகள் விளையாடும் கட்டில் மெத்தைகள் விளையாட்டுப் பொருட்களில் தொடுகையுறும்போது  அதனை மனிதன் கையாள்வதால் மனிதனுக்கு பரவும். 

இதனால் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதிப்படையக் கூடும். 

பொதுவாக காய்ச்சல் மற்றும் இரத்தத்துடன் கூடிய வயிற்றுளைவு இதன் அறிகுறிகளாக இருக்கும். 

 செல்லப்பிராணிகளை கையாளும்போது அடிக்கடி கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

04. Tetanus:
பூனை உட்பட பொதுவாக விலங்குகள் கடிக்கும் போது Tetanus (ஈர்ப்புவலி) தொற்று பரவ வாய்ப்பு உண்டு. இதனால் பொதுவாக மிருகக் கடிபட்ட உடன் Tetanus தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

🛑05. புழுத் தொற்றுகள்:
பொதுவாக பூனையின் மலம் மற்றும் உமிழ் நீர் ஊடாக புழுத்தொற்றுக்கள் பரவலாம். 
Cat Tapeworm 
Cryptosporidiosis 
Giardiasis 
Hookworm 
Roundworms 
Toxoplasmosis 
என பட்டியல் நீண்டு செல்லும். 

பூனையை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் காலாகாலத்துக்கு பூனைகளுக்கும் புழுத்தொற்று மருந்துகள் கொடுப்பது அவசியமாகும். 

05. Allergy / Asthma:
பூனையின் முடி சிலருக்கு Allergy தும்மலை ஏற்படுத்தலாம். வீட்டில் அஸ்மா நோயாளிகள் இருந்தால் அவர்களுக்கு சில வேளை பூனையின் முடி காற்றில் பரவி நோயை அதிகரிக்கலாம் (exacerbation).

06. இது போக மேலும் பல Bacteria நோய்களான:
Yersinia Pestis (Plague)
Salmonellosis 
Tularaemia 
Ringworm எனும் Fungus தொற்று
போன்றவையும் தொற்றுக்குள்ளான பூனையை தொடுதல், அவற்றின் மலசலங்கள் உணவு, நீரில் கலத்தல் போன்றவற்றால் ஏற்படலாம். 

⁉️ பூனையினால் பரவும் நோய்களை தடுப்பதற்கான வழிகள்? 

✅ செல்லப்பிராணிகள், பூனைகளை கையாளும்போது அடிக்கடி கை கழுவுதல். 

✅ பூனைகள் காயங்களை, முகத்தை நக்குவதை தவிர்த்துக் கொள்ளல்.

✅ வருடத்துக்கு ஒரு முறையாவது வளர்ப்பு பிராணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி புழுத்தொற்று மற்றும் தேவையான மருந்துகளை வழங்கல். 

✅ வளர்ப்பு பூனைகளுக்கு வருடா வருடம் Rabies தடுப்பூசி போட்டுக் கொள்ளல்.

✅ பூனைகள் தோல் நோய்களுக்கு உட்பட்டிருந்தால் மிருக வைத்தியரை நாடி மருந்துகளை பெற்றுக் கொள்ள ல்.

✅ குழந்தைகள், வயோதிபர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் பூனைகளை கையாள்வதை தவிர்த்துக் கொள்ளல்.

✅ பூனைகள் மலசலம் கழிக்க தனியான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அடிக்கடி பாதுகாப்பாக அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். 

✅ பூனையின் நகக் கீறலிலிருந்து தவிர்ந்து கொள்ள பழக்கம் இல்லாத பூனைகளைகையாள்வதை தவிர்ப்பதோடு பூனைகளை ஆக்ரோஷமாக கையாள்வதையும் தவிர்க்க வேண்டும். 

⁉️ பூனை கடித்தால் அல்லது நகக்கீறள் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? 

✅ Soap  நீரினால் கடிபட்ட இடத்தை நன்றாக கழுவ வேண்டும். 

✅ தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத பூனை கடித்தால் உடனடியாக வைத்தியசாலையை அனுகி Rabies தடுப்பூசியை தொடர்ச்சியாக பெறவேண்டும். 

🛑🛑
✅ கடித்த அல்லது விராண்டிய பூனை நோய்வாய்ப்பட்டதாக தென்பட்டாலோ, காயம் பெரிதாக ஏற்பட்டாலோ,  கடித்த பின் காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டும்.

By: Dr Ziyad Aia 
MD - Health Informatics 


#catbite 
#catscratchfever 
#CatScratchDisease 
#ziyadaia
பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள். பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள். Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு



இன்று நண்பகல் திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - (தில்ஷாட்) மற்றும் மனைவி மூழ்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.

கும்புகந்துரை (விக்டோறியா ) நீர்த்தேக்கத்தில் உள்ள மோல் கல் என்ற இடத்தில் இருவரும் மூழ்கி உள்ள நிலையில் ஜனாஸாக்களை தேடும் பணி தொடர்கிற நிலையில் தேட சென்ற மற்றும் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன.
திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு திகன - கும்புகந்துரை  நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி  மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த 17 வயது மாணவி மீது துப்பாக்கி சூடு



கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 17 வயது மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மின்னேரிய யாய 04 கிரித்தலே பகுதியில் நேற்று (14) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், மின்னேரியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த மாணவி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த 17 வயது மாணவி மீது துப்பாக்கி சூடு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த 17 வயது மாணவி மீது துப்பாக்கி சூடு Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.



யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் பட்டா ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.


புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

இன்று கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்



கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று ஓரளவு அதிகரித்துக் காணப்படும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

மொஹமட் சாலிஹீன்,  
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

இன்று கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் இன்று கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை  அதிகரித்துக் காணப்படும் Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

ஈரானின் தாக்குதல், காஸா சார்பு தரப்பு ஹமாஸ் மற்றும் சுதந்திர காஸா மீதான கனவிற்கு பாதகமாகவே அமையும் என ஈரான் தரப்பு நிபுணர் விளக்கம்.



தொகுப்பு : Zafnas Zarook
நேற்றைய Al Jazeera English தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பின் போது ஈரானின் தாக்குதல் எந்த வழியில் காஸா தரப்பின் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு வலு சேர்க்கும் என வினவப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நிபுணர், ஈரானின் தாக்குதல் காஸா சார்பு தரப்பு ஹமாஸ் மற்றும் சுதந்திர காஸா மீதான கனவிற்கு பாதகமாக அமையும் என்றார்.


ஏனெனில் இன்று இஸ்ரேலியர்கள் மற்றும் மேற்குலக நாடுகள் உட்பட பெரும்பாலானோர் காஸா விடுவிக்கப் பட வேணடும் என்ற மன நிலையை அடைந்துள்ளனர். ஐ நா முதல் உலக நாடுகள் வரை போர் நிறுத்தத்தை வலியுறுத்த தொடங்கியுள்ளது. நெதன்யாகு , பைடன் தன் மக்களினாலே வெறுக்கும் நிலையை அடைந்துள்ளனர். இந்த நேரம் ஈரான் மீது உலக கவனம் சென்றால் அது காஸாவிற்கு பொருத்தமானதாக அமையாது என்றார். மேலும் ஈரானின் தாக்குதல் நெதன்யாகு , பைடன் இற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவை கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இந்த நேரத்தில ஈரானின் தாக்குதல் தேவை இல்லை என தெளிவுபடுத்தினார்.

இதனை உணர்ந்ததாலோ என்னவோ ஈரான் இஸ்ரேலிற்கான பதில் தாக்குதலினை மிகச் சிறப்பாக வடிவமைத்தது.


1. சிரியாவில் ஈரானின் தூதுவராலயம் தாக்குதல் நடந்து முடிந்த 10 நாட்கள் முழுமையாக உலக நாடுகள் உட்பட UN இன் பதிலை காந்திருந்தது. வழமை போன்று இவை மெளனமாக இருந்தன.


2. அடுத்து Vienna Convention இனை இஸ்ரேல் மீறி உள்ளதாக சுட்டி காட்டியது.ஆனால் அப்போதும் உலகம் மெளனம் காத்தது.


3. அடுத்து Article 51 of the UN Charter படி தனக்கு Self Defense செய்ய உரிமை இருப்பதாக தெரிவித்தது.


4. தாக்குதலிற்கு 72 மணித்தியாலத்திற்கு முன் தன் அயல் நாடுகள் இற்கு தனது தாக்குதல் எண்ணத்தை வெளிப்படுத்தியது.


5. ஈற்றில் பாரிய ஆயுதம் இருந்தும் அதனை பயன்படுத்தாது சிறிய அளவிலான தாக்குதல் மூலம் மரண பயத்தை இஸ்ரேலிற்கு காட்டியது.


6. தன் மீது இஸ்ரேல் மறு தாக்குதல் நடாத்தாத வரை, தான் இனி எந்த தாக்குதலையும் நடத்த மாட்டோம் என்று கூறி ஈரான் தன் தாக்குதலை மட்டுப்படுத்தியது.


அழகிய முறையில் திட்டமிட்டு இஸ்ரேலை கதி கலங்க வைத்துள்ளது ஈரான்.

ஏலவே மொஸாட் என்ற போலி விம்பம் உடைந்தது போல் இனி அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் விம்பமும் மெதுவாய் உடையும்.

ஈற்றில் மத்திய கிழக்கு, ரஸ்யா மற்றும் சீனா தரப்பு உலகை ஆளும் புதிய தரப்பாய் மலரும்.

தொகுப்பு : Zafnas Zarook
ஈரானின் தாக்குதல், காஸா சார்பு தரப்பு ஹமாஸ் மற்றும் சுதந்திர காஸா மீதான கனவிற்கு பாதகமாகவே அமையும் என ஈரான் தரப்பு நிபுணர் விளக்கம். ஈரானின் தாக்குதல், காஸா சார்பு தரப்பு ஹமாஸ் மற்றும் சுதந்திர காஸா மீதான கனவிற்கு பாதகமாகவே அமையும் என ஈரான் தரப்பு நிபுணர் விளக்கம். Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

ராமன் - ரஹ்மான் என நான் அன்று கூறிய க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் அத‌ற்காக‌ நான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்கிறேன் ; முபாற‌க் மௌல‌வி



சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு ம‌ன‌வேத‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என‌ என்னிட‌ம் நேர‌டியாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் அக்க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் அத‌ற்காக‌ நான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்கிறேன் என‌ உல‌மா க‌ட்சி ம‌ற்றும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.


இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளை சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர்.

இத‌னால்த்தான் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன்.

ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அகௌர‌வ‌ப்ப‌டுத்துகிற‌து என‌ நான் என்றும் ம‌திக்கும், வாழ்வில், த‌ன‌து ப‌த‌வியில் எப்போதும் நேர்மையை க‌டைப்பிடிக்கும் ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால் என் க‌ருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌து புரிகிற‌து.

ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து நோகும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளின் ம‌ன‌து வ‌லிக்கிற‌து என்றால் அத‌ற்காக‌ நான் அவ‌ர்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி
15.4.2024

ராமன் - ரஹ்மான் என நான் அன்று கூறிய க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் அத‌ற்காக‌ நான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்கிறேன் ; முபாற‌க் மௌல‌வி ராமன் - ரஹ்மான் என நான் அன்று கூறிய க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் அத‌ற்காக‌ நான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்கிறேன் ; முபாற‌க் மௌல‌வி Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை தூதரகம் அறிவிப்பு.



இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

குறித்த விமானத்தை மீண்டும் டுபாய் நோக்கி திரும்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அந்த விமானத்தில் இஸ்ரேல் நோக்கி பயணித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை தூதரகம் அறிவிப்பு. இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை தூதரகம் அறிவிப்பு. Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5

மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலையில் காலமானார்கள்



மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலை -ரைத்தலாவலையில் காலமானார்கள் 

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன் 

அன்னார் முன்னாள் ஆசிரியை மசாஹிமா அவர்களின் கணவரும், 
சனா ( uk ) 
பிர்னாஸ் ( Haira matale )
Zacky மற்றும் Faiz Ahmed ஆகியோரின் தந்தையும் ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10 மணிக்கு உக்குவலை -ரைத்தலாவலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலையில் காலமானார்கள் மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலையில் காலமானார்கள் Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

சுற்றுலா சென்ற வேன் இறம்பொடை- கொழும்பு பிரதான வீதியில் விபத்து - 2 பேர் பலி



இறம்பொடை- கொழும்பு பிரதான வீதியில் எல்பொடைக்கும், புஸ்ஸலாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று மாலை வேன் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.


சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான வேன்  நுவரெலியாவுக்கு சுற்றுலாவுக்கு வருகைதந்து பின் கொழும்பை நோக்கி பயணிக்கையில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் இச்சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான வேனில் சிறு குழந்தைகளும் வயதானவர்களும் கூட இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தை ஒன்றும் 70 வயதுடைய ஒருவருமே உயிரிழந்து உள்ளனர்.

அதேநேரம் விபத்தில் வேனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பிரதேச மக்கள்,பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சென்ற வேன் இறம்பொடை- கொழும்பு பிரதான வீதியில் விபத்து - 2 பேர் பலி சுற்றுலா சென்ற வேன் இறம்பொடை- கொழும்பு பிரதான வீதியில் விபத்து - 2 பேர் பலி Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம் இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம்




ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். நாம் ஒரு தெளிவான கோட்பாட்டை வைத்துள்ளோம். யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கு செய்வோம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக்கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம். இஸ்ரேல் குடிமக்களே, நீங்களும் சம நிலையில் உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.


ராணுவத்தின் கட்டளையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால், நம் எதிரிகள் அனைவரையும் வெல்வோம். இஸ்ரேலை ஆதரிப்பதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறேன் என்றார்.


இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம் இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம் இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம் இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம் Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் சென்ற கார் மரத்தில் மோதியதில் இரு பெண்கள் உயிரிழப்பு.



புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலிஎல ஆலயம் இன்று (14) இடம்பெற்றது.

கம்பஹா தொம்பே புவக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம். கமலாவதி (70) மற்றும் மருமகள் ஒருவருடன் அவரது மாமியார் முதுகமஹேவகே சிரியாவதி (51) ஆகியோரும் கூறியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் சென்ற கார் மரத்தில் மோதியதில் இரு பெண்கள் உயிரிழப்பு. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் சென்ற கார் மரத்தில் மோதியதில் இரு பெண்கள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

VIDEO > இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்று, ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.



இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்கள்(ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தியதால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.



ஹமாஸ் படை மீது குறிவைத்து பாலஸ்தீன மக்கள் வாழும் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்துள்ளது. இந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் சண்டையை தொடங்கியுள்ளது. சிரியாவிலுள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, நிராகரிக்கவும் இல்லை. இதனையடுத்து, ஈரானிலிருந்து இன்று அதிகாலை (ஏப். 14) நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இஸ்ரேலை குறிவைத்து அனுப்பப்பட்டன.



இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்கும் விதமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.


இந்த சண்டையில் அமெரிக்கா தலையிடக் கூடாதென ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் அப்படியொரு தாக்குதலை மேற்கொண்டால் அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்குமென ஈரான் தற்போது அறிவித்துள்ளது.
VIDEO > இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்று, ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம். VIDEO > இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்று, ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம். Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடுகிறது.



ஈரான் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கோரியதற்கு அமைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடவுள்ளது.

இதன்படி 15 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபை நியூயோர்க் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.

கடுமையான அத்துமீறல்களுக்காக ஈரானைக் கண்டித்து உடனடியாக IRGC என்ற ஈரானின் புரட்சிக் காவலர்கள் படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன், கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு "தீவிரமான அச்சுறுத்தல்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க இஸ்ரேலும் ஈரானும் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தில் கடந்த முதலாம் திகதி வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நேற்று (சனிக்கிழமை) இஸ்ரேலுக்கு எதிராக வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியபோதும், டெல் அவிவ் அதிகாரப்பூர்வமாக அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடுகிறது. Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை ஆரம்பித்தது.



ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


மொத்தம் சுமார் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவென்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்றும் கசிந்துள்ளது...


ஆனால், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல்களை எதிர்பார்த்து, இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன

Inruwஞாயிற்றுக்கிழமை முதல், பாடசாலைகளை மூடுவதாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் 1,000 பேர் கூடுவதை கட்டுப்படுத்துவதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.
இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை ஆரம்பித்தது. Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5

சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- அனைவரும் காயம்



பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வேனே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- அனைவரும் காயம் சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- அனைவரும் காயம் Reviewed by Madawala News on April 13, 2024 Rating: 5

ஜப்பானின் சனத்தொகை விகிதம் இவ்வருடம் மீண்டும் குறைந்தது.



ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 0.48 வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது. உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை
இதேவேளை, ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்கும் என ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது
ஜப்பானின் சனத்தொகை விகிதம் இவ்வருடம் மீண்டும் குறைந்தது. ஜப்பானின் சனத்தொகை விகிதம் இவ்வருடம் மீண்டும் குறைந்தது. Reviewed by Madawala News on April 13, 2024 Rating: 5

VIDEO > ஒரு ஓட்ட வடைக்கும் தேநீருக்கும் 1000 ரூபாய் வசூலித்து அசிங்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவு



களுத்துறையில் தன்னை உணவகம் ஒன்றில் ஏமாற்றிய செயற்பாடுகளை சமூக ஊடகம் வாயிலாக வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.



டிம் டென்ஸ் என்ற பெல்ஜிய சுற்றுலா பயணி, நாட்டின் தோற்றம், மற்றும் சிறப்பு அம்சங்கள் தொடர்பான ஆவணப்படங்களை தயாரித்து வருகிறார்.



தான் செல்லும் இடங்கள், அங்குள்ள சிறப்புகள், உணவு உள்ளிட்ட அனைத்தையும் அவர் சமூக ஊடகம் வாயிலாக நேரலையாக வெளியிட்டு வருகின்றார்.



களுத்துறைக்கு சுற்றுலா சென்ற அவர் உணவகம் ஒன்றுக்குச் சென்று உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர் அருந்துகின்றார்.


இதற்காக அவரிடம் இருந்து 1000 ரூபா கோரப்பட்டுள்ளது. இந்த விலைகள் நியாயமற்றவை என்று வெளிநாட்டவர் மிகவும் பணிவாகக் கூறியுள்ளார்.



இதனையடுத்து குறித்த வெளிநாட்டு பயணி உணவகம் முன் நின்று ஒரு உளுந்து வடையின் விலை எவ்வளவு என்று ஒரு வழிப்போக்கரிடம் கேட்டுள்ளார்.



150 ரூபாய் விலையுள்ள உளுந்துவடைக்கும், தேனீருக்கும் 800 ரூபாய் வசூலித்தது தெரியவந்ததும் ஏமாற்றிய நபர் உடனடியாக வெளிநாட்டவருக்கு 200 ரூபாயை மீள கொடுத்துள்ளார்.


அப்போதும் கூட அவரிடம் இருந்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. “பணம் பிரச்சினை அல்ல, மக்கள் நேர்மையாக இருப்பது முக்கியமானது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறை தற்போது மெல்ல மெல்ல கட்டியெழுப்பப்படுகின்றது.

சுற்றுலா மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சி செய்யும் போது மிக அடிப்படையான விடயம், நாட்டின் நேர்மையைப் பற்றிய நம்பிக்கையை வெளிநாட்டவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.



இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் செயற்பாடானது, இலங்கை மீது வெளிநாட்டவர்கள் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை சிதைத்துவிடும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
VIDEO > ஒரு ஓட்ட வடைக்கும் தேநீருக்கும் 1000 ரூபாய் வசூலித்து அசிங்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவு VIDEO > ஒரு ஓட்ட வடைக்கும் தேநீருக்கும் 1000 ரூபாய் வசூலித்து அசிங்கப்பட்ட  சம்பவம் இலங்கையில் பதிவு Reviewed by Madawala News on April 13, 2024 Rating: 5

அவுஸ்திரேலிய சிட்னி மால் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆனது



அவுஸ்திரேலிய சிட்னி நகரின் மால் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.



உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



எவ்வாறாயினும் பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிந்திய செய்திகள் தெரிவித்தன.


அவுஸ்திரேலிய சிட்னி மால் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆனது அவுஸ்திரேலிய சிட்னி மால் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆனது Reviewed by Madawala News on April 13, 2024 Rating: 5
Powered by Blogger.